Tuesday, 9 January 2018

ஓ மை கடவுளே!!! கூட்டம் கூட்டமா வருகினம், என் ரெசிப்பி படிக்க:)

Friday, 5 January 2018

உங்களிடம் சில வார்த்தைகள்:) கேட்டால் கேளுங்கள்:)

தலைப்பு இப்படித்தான் போடோணுமாம்:))
அட்வைஸ்கள் பற்றி தொடர்ப் பதிவாக எழுதச் சொல்லி  “அவர்கள் உண்மைகள்” புளொக் ஓனர்.. திருவாளர் ட்றுத்:) அவர்கள் அழைச்சிருக்கிறார்.

Monday, 1 January 2018

து எசப்பாட்டோ ?:)

 தூளியிலே.. ஆடவந்த பேபி அதிராவை புது வருடத்தில்.. ஆஜீர்வதிங்கோ:)
ரி, என்னமோ தலைப்பைப் போட்டிட்டு என்னமோ பேசுறேன், அதுவும் இந்தப் புத்தாண்டில் எனத்தானே யோசிக்கிறீங்க...:).. இங்கின ஒருவரின் வீட்டுக்கு கொஞ்ச நாளைக்கு முன் ஸ்னோ கொட்டியதாம்:).. அப்போ எங்களுக்கு வரவில்லை:).. எங்களுக்குப் புது வருடம் புத்தாம் புதிசாய் பளீச்செனப் பிறக்கோணும் என எழுதப்பட்டிருக்கு:).. அதை ஆரால மாற்ற முடியும் சொல்லுங்கோ:).. அதனால எங்கள் வீட்டுச் ஸ்னோ:)வும், அதில் நான் வரைந்த ஓவியமும்...

இது Snow வில் எழுதிய.... ஆப்பி நியூ இயர்:)


நான் வெளியே போய் எடுக்கவில்லை, அனைத்தும் வீட்டில் இருந்தே எடுத்த படங்கள்..


===========================================================================================
ஒரு குட்டி பிரேக்:) ல ஒரு குட்டிக் கதை:)
ஹொலிடே தானே இப்போ.. அதனால வடிவாச் சாப்பிட்டமா:), ஒரு நாள் நல்ல நித்திரை பின்னேரம், பகல் முழுக்க சூரியன் அண்ணன் வரவே இல்லை:) கண்ணை முழிக்கிறேன், கேர்ட்டினூடாக கண்ணிலே ஒளி குத்துது, அடடா அண்ணன் வந்திட்டாரோ எனப் பார்த்தால், அது பெரிசாக சந்திரன் அண்ணன்:)... நம்ப மாட்டீங்க அப்போ நேரம் என்ன தெரியுமோ? பின்னேரம் 4.39... றூமில் இருந்து கொண்டே யூம்:) பண்ணி, நேரத்தையும் சந்திரன் அண்ணாவையும் படமெடுத்தேன்..:)).. பார்த்தீங்களோ நம் நாட்டையும் நேர காலத்தையும்:).. கறுப்பாக இருப்பது றூமுக்குள் இருட்டு:)


=========================================================================================


இது குட்டி மகளின் பொற்பாதங்களும்:), சுவீட் 16 அம்மாவின் பூம் பாதங்களும்:).. இருவரும் ஸ்னோவில் நடந்தோமே:).. ஹையோ எதுக்கு இப்போ கல்லெடுக்கிறீங்க?:))

எங்கட பின் காடின்:)


எல்லோர் பெயரும் எழுத ஆசை, ஆனா ஸ்னோ நிறைய என்பதால் எழுத முடியவில்லை ஒழுங்காக:)

எங்கள் டெய்சிப்பிள்ளை, முதலில் பயப்பிட்டா, பின்பு நாங்களும் சேர்ந்து இறங்க, என்னமாதிரி நடக்கிறா பாருங்கோ.. அவவின் கால் எல்லாம் ஸ்னோவில் புதையுதே:) இது யூ ரியூப்பில் போட்டு எடுத்தேன், அதனால ஓபின் பண்ணிப் பார்க்க ஈசியா இருக்கும்..

மம்மி பிளீஸ்ஸ்ஸ் ஓபின் த டோர்:)
[கிச்சின் டோரைத் திறக்கட்டாம் காடினில் போய் விளையாட:)]

குண்டூசிக் குறிப்பு:
கீதாக்கா/கீசாக்கா:)[நெல்லைத்தமிழனின் பாஷையில்].. படங்கள் அனைத்தும் மிகவும் கைதேர்ந்த கமெராக்காரர் ஆகிய:) அதிராவால் எடுக்கப்பட்டவை என்பதனை இச்சபையில் அறிவிச்சு அமர்கிறேன்:))

_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_
ஊசிக் குறிப்பு:
 “மெல்லி நல்லாள் தோள் சேர்”[மகரவருக்கம்(94)]
ஜொன்னவர் ஒளவைப் பாட்டி:) நொட் அவ்வைப் பாட்டி:) 
_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_()_

ஊசி இணைப்பு:
இதை ரெண்டு தரம் படியுங்கோ.. அப்போதான் புரியும்:)
{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}
நன்றீஈஈஈஈ நன்றீஈஈஈஈ
{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}

Sunday, 24 December 2017

ந்திட்டுதோ கிறிஸ்மஸ்?:)

சன்ரா வந்திட்டாரா? சன்ரா வந்திட்டாரா? கண்ணைத் திறக்கட்டோ?:)

Monday, 18 December 2017

மழையில் நனைந்து விறைத்த புறாப்பிள்ளை:)

ஸ்ஸ்ஸ்ஸ் சாப்பிடும்போதுகூட மனிசரால நிம்மதியாச் சாப்பிட முடியுதோ.. கர்ர்ர்ர்ர்ர்:))