Thursday, 5 October 2017

ஓவி... என்னை மன்னித்து விடு..:(

இம்முறை நம்ம ஏரியாவில்... நெல்லைத் தமிழனால் கொடுக்கப்பட்ட கருவுக்கு, கதை எனும் பெயரில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்:), நன்றாக இல்லை எனில் மன்னிச்சுக்கோங்கோ.. இது ஒரு உண்மைச் சம்பவத்தைக் கருவாகக் கொண்டு.. சிலபொய்களை சேர்த்து, பூசி மெழுகி எழுதியிருக்கிறேன்.- _()_

Tuesday, 3 October 2017

திருமணமான புதுமணத் தம்பதிகள் இதைப் பார்க்க வேண்டாம்:)

சரி சரி வாங்கோ வாங்கோ... பத்து வசனம் சொல்வதை, ஒரு படம் விளக்கிடும்:).. அதனால படம் படமாப் போடுவதில் ஒண்ணும் தப்பில்லையே:) [ஸ்ஸ்ஸ்ஸ் எப்பூடி எல்லாம் ஜொள்ளிச் சமாளிச்சுப் படம் காட்ட வேண்டிக்கிடக்கு:)].. ஓகே கடலில் குதிக்கலாம் வாங்கோ:)..

Monday, 25 September 2017

_()_அதிரா வீட்டில் மாவிளக்கு_()_

து எல்லோருக்கும் தெரிஞ்ச மாவிளக்குத்தான், இருப்பினும் அதிரா வீட்டுக் கன்னி மாவிளக்கு இது:).. இந்த மாவிளக்கை நினைச்சாலே பல சம்பவங்கள் கூடவே ஒட்டிக்கொண்டு வந்து விடுகிறது...

இது திங்கட்கிழமை:) அங்கே:) வர வேண்டிய ரெசிப்பி:) அங்கு ஞாயிறு, திங்கள் ஆனமையால் ...இம்முறை இங்கு வந்திருக்கு:).. ஹா ஹா ஹா:).

ஸ்ஸ்ஸ் இப்பூடிக் கண்ணாடியோடு இருந்திட்டால், ஆரும் திட்டினாலும்.. எந்த ரியாக்‌ஷனும் முகத்தில் காட்டிடாமல் புன்னகையோடு இருந்திடலாம்:)

நாங்கள் எப்பவும் மாவிளக்குப் போடுவது தினை/சாமி மாவில்தான்.  ஊரில் யாரும் அரிசிமாவில் போட்டு நான் பார்த்ததில்லை. சின்ன வயதிலிருந்தே நிறையச் சாப்பிட்டிருக்கிறேன், சூப்பராக இருக்கும், ஆனா செய்ததில்லை.

எங்கள் மூத்த மகன் பிறந்தபோது, அம்மா நேர்த்தி வச்சிட்டா, கதிர்காமம் போய் அங்குதான் முதல் மொட்டை போட்டு, கங்கையில் நீராடி, மாவிளக்கும் கோயிலில் போடுவோம் என. நாங்கள் எப்பவும் குழந்தை பிறந்து முதன்முதலில் மொட்டைதான் போடுவோம், பின்னர்தான் ஸ்டைல் ஸ்டைலா வெட்டுவதெல்லாம்.

அதனால, சரி நேர்த்தியை நிறைவேத்தலாம் என கதிர்காமம் போனோம் . மொட்டை போட்டாச்சு:)..

அங்குதான் அம்மா செய்துதர நான் மாவிளக்கு ஏற்றினேன்.. எப்பூடி அதிராவின் அந்த மாவிளக்கு அயகோ?:)..

பின்னர் எப்பவும் அதுக்கு சந்தர்ப்பம் அமையவில்லை. தினையும் கிடைக்கவில்லை. இம்முறை தமிழ்க்கடையில் தினை பார்த்தபோது, ஆஹா நவராத்திரியின் ஒரு நாளைக்கு, மாவிளக்குப் போடலாமே எனும் ஆசை மேலோங்கி பொருட்கள் வாங்கி வந்தோம்..

^^^^^^^^^%%%%%%%^^^^^^^^^^^^இடைவேளை^^^^^^^^^%%%%%%%^^^^^^^^^^^^
இந்த விளக்கு எரிக்க எரிக்க பல பழைய பாடல்கள் மனதில் ஓடின... பல நினைவுகள் பரிமாறிக்கொண்டோம்:).. [ https://www.youtube.com/watch?v=_i8QMynY0qU] திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக... குலம் விளங்க எங்க வீட்டில் குடியிருக்க வருக...  மணமகள்(அது நாந்தேன்:)), கையில் மாலையோடு மணவறையை நோக்கி ஷையோடு:) நடந்து வரும்போது இப்பாடல் ஒலித்ததே:) [சிடியில் இருக்கு].

இத்தோடு இன்னொரு நினைவு.... எங்கள் அக்காவின் திருமணத்தின் போது, மணமகன்(அத்தான்)... மாப்பிள்ளை சூட்டோடு.. அலங்கரிக்கப்பட்ட காராலே இறங்கி, கழுத்தில் ரோஜாப்பூ மாலையுடன் மணவறையை நோக்கி வரும்போது.... “ராஜாத்தீஈஈஈஈஈஈ.. என்னைத்தேடி வருவாரே ராஜா.. ராஜா... ரோஜாப்பூஊஊஊ மாலை சூடி வருவாரே லேசா லேசா... எனும் பாடல் போட்டார்கள்.. என்ன ஒரு பொருத்தமாக இருந்தது.. இதில் இன்னொன்று அத்தானின் பெயரில் ராஜா இருக்கு:).
^^^^^^^^^%%%%%%%^^^^^^^^^^^^%%%%%%%^^^^^^^^^%%%%%%%^^^^^^^^^^^^
முக்கிய அறிவித்தல்:- முன்ன முன்னம் நான் செய்தமையால் மாவின் பதத்தில் கொஞ்சம் சொதப்பி விட்டது:).. அது என்னுடைய தப்பூஊ:)..  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதாரது சிரிக்கிறது:).. என்ன தப்பாச்சு எனச் சொல்கிறேன், நீங்கள் செய்ய நினைச்சால் திருத்திக் கொள்ளுங்கோ:).

தேவையானவை..
தினை, சக்கரை, தேன், வாழைப்பழம், நெய்.

இதில் தினை அரிசியை 2 மணிநேரம் ஊறவிட்டு, வடித்து எடுத்து பேப்பரில் போட்டு உலர்த்தி எடுங்கள்.[காய வைக்கச் சொல்லவில்லை, ஈரத்தைப் போக்கச் சொன்னேன்]

உலர்த்திய தினையை அரைத்து, மாவை எடுக்க வேண்டும்.[ நான் செய்த தவறு மாவோடு சக்கரையையும் சேர்த்து அரைத்து எடுத்தேன்].. அப்படிச் செய்யக்கூடாது. மாவை எடுத்து அதில் சக்கரையைத் தூளாக்கிச் சேர்த்து, தேன் சேர்த்துக் குழைக்கவேணும். அப்போது பதம் சரியாக விளக்கு பிடிக்க வரவில்லை எனில் கொஞ்சம் கொஞ்சமாக வாழைப்பழம் சேர்த்துக் குழைக்க வேண்டும். தண்ணி சேர்ப்பதில்லை.

நான் செய்த இன்னொரு தவறு, மாவைக் குழைச்சு, ஊறட்டுமே என ஒருமணிநேரம் விட்டு விட்டேன்.. அது இன்னும் கசிந்து மா நன்கு குழைந்துவிட்டது.

மாக்குழைத்த உடனேயே சுட்டி விளக்குகள்போல பிடித்து உடனேயே எரிக்கத் தொடங்க வேண்டும்.

விளக்கின் நடுவே இருக்கும் குழியில் நெய் ஊற்றி, எரிக்க வேண்டும்.

 இதற்கு நிறைய நெய் தேவைப்படும், நிறையத் திரி அல்லது திரிச்சீலையை நெய்யில் தோய்த்து விளக்கின் எல்லாப் பக்கமும் எரிய விடவேணும்.

 கிட்டத்தட்ட 2 மணித்தியாலங்கள் எரிய மட்டும் எடுத்தது. சுவை சூப்பர் சுவை... இங்கு வாழை இலை கிடைக்காத காரணத்தால் விளக்கின் அடிப்பகுதி ஒட்ட்டியிருந்தது.. வாழை இலையில்தான் இதனை எரிக்க வேண்டும்.
========================================================================
மா விளக்கு சாப்பிட்ட மயக்கத்தில் இருப்பீங்கள்.. இந்த மயக்கத்தோடு எங்கே விரலைக் காட்டுங்கோ.. ஆங்ங்ன் இங்கின.. தம் அப்:)[இப்போ தெளிவாச் சொல்லாட்டில் பயம்ம்மாக்கிடக்கே:)] இங்கின தமனா அக்காவை டச்சு பண்ணுங்கோ:) பீஸ்ஸ்ஸ்ஸ்:).))

ஆவ்வ்வ்வ் மகுடம் கிடைச்சிட்டுதூஊஊ:)
========================================================================
ஊசி இணைப்பு:
ZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ

Thursday, 21 September 2017

ண்ளால் ப்டியும் ம் டுக்முடியுமோ?:)

ஹா ஹா ஹா தலைப்பைப் பார்த்து யாரும் பயந்திடாதீங்கோ:) இந்தக் காலத்தில உங்களை யாரும் இப்படி சபதம் எடுக்கச் சொல்லிக் கேய்க்கவே மாட்டோம்:).

2ம் பகுதியிலிருந்து கதை தொடர்கிறது.. வழமைபோல என் பாஷையில் மானே தேனே போட்டு எழுதுவதால், தவறுகள் வரலாம் மன்னிச்சிடுங்கோ:).. இதன்
முதல் பாகம் படிக்க இங்கு..
2ம் பாகம் படிக்க இங்கு..

Monday, 18 September 2017

பகுதி ரெண்டு:) [இப்படியும்...:)]

த் தொடரின் முதல் பகுதியைக் காண.... இங்கின கையை வையுங்கோ..

இது உங்கள் யாருக்கும் தெரியாத கதை:)..  “ஆஹா அதிரா மிக அருமையாக கதை எழுதுறீங்க:).. தொடருங்கோ முடிவு அறிய ஆவலாக இருக்கிறோம்:)” இப்பூடித்தான் சொல்லோணும் ஓக்கே?:). ஹா ஹா ஹா. தொடர்கிறது...

“அகல்யா சொல்? யார் நீ? எதுக்காக நமக்குப் பிறக்கும் அத்தனை குழந்தைகளையும் கொல்கிறாய்?.. இக்குழந்தை எனக்கு வேணும்..” என்கிறார்... 

Saturday, 16 September 2017

இப்படியும் ஒரு மகன் இருக்க முடியுமோ?

ன்னமோ தெரியல்ல.. இக் கதை கேட்டதிலிருந்து .. இதை எல்லோருக்கும் சொல்லோணும் எனும் ஆவல் அதிகமானது, அவ்ளோ தூரம் மனதை டச்சுப் பண்ணி விட்டது.... அதனால நான் உள் வாங்கியதை.. என் பாஷையில் சோட் அண்ட் சுவீட்டாகவும் அங்கங்கு மானே.. தேனே எல்லாம் போட்டு மெருகூட்டியும்... வெளியே தருகிறேன்.. தப்புக்கள் தவறுகள் இருப்பின் மன்னிச்சுக்கோங்ங்ங்ங்:). பெயரெல்லாம் என் விருப்பத்துக்கு வைத்துள்ளேன்.. ஆனாலும் நீங்க கண்டு பிடிச்சிடுவீங்க:).

Thursday, 7 September 2017

நியூயோர்க்கில் ஒரு கிழமை:)

தெரிஞ்சோ தெரியாமலோ என்னோடு ஃபிரெண்ட்:) ஆகிட்டீங்க:) அதனால என்னுடைய போட்டோக்கள் எழுத்துக்களைப் பார்த்து:) சகித்துக்கொண்டு, நீங்க கொமெண்ட் போட்டுத்தானே ஆகணும்:).. அது உங்கள் முன்வினைப் பயன் ஹா ஹா ஹா:)..
பின்ன.. காசு செலவழிச்சுப் போய் படமெடுத்து வந்திருக்கிறேன்ன்.. அதை உங்களுக்குப் போட்டுக் காட்ட வாணாம்ம்ம்.... இங்கு ஒரு வசனம் எனக்கு நினைவுக்கு வருது:).. இனிச் “செத்தார்யா சேகரூஊஊ”.. ஹா ஹா ஹா:)..

Saturday, 2 September 2017

கொஞ்சம் அழுகை.. கொஞ்சம் மகிழ்ச்சி:)

இது  “நம்மஏரியா” வுக்கான, கதையின் கருவை வைத்து எழுதப்பட்டிருக்கும் கதை... கதையின் கருக் கண்டிஷனாக மூன்று வசனங்களைக் கெள அண்ணன் கொடுத்திருந்தார்.. அவை இங்கே ஆரம்பத்திலும் நடுவிலும்.. முடிவிலும் பச்சை எழுத்துக்களால் காட்டப்பட்டிருக்கு.. விபரம் அறிய மேலே நம்மஏரியா வைக் கிளிக் பண்ணிப் போய்ப் படிச்சிட்டு வாங்கோ..  வெரி சோரி நான் வரமாட்டேன்ன்:).. நான் அவரோடு கோபமாக்கும்:)..

Sunday, 27 August 2017

அதிரா “அது” வானத்தின் மேலே:)

நான் வந்துட்டேன்.. திரும்ப வந்திட்டேன் ஹா ஹா ஹா துக்கம்!!!..

ஹொலிடே முடிச்சு வந்தாலும் மனம் என்னமோ ஹொலிடே மூட்லயே இருக்குது:).. அதுவும் ட்றம்ப் அங்கிளை மீட் பண்ணியதிலிருந்து:).. நிறையப் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைச்சாலும்:).. புதுப் பிரச்சனைகளும் ஆரம்பமாச்ச்ச்ச்:)...

ப்போ எதைச் சொல்லுவேன் எதை விடுவேன் எனத் தெரியல்ல.. அதனால முதலில் வானத்தில் பறந்ததை மட்டும் போட்டுக் காட்டிடுறேன்(ட்றெயிலர்).. பின்பு விரிவாப் பார்க்கலாம். இம்முறை ஹொலிடே,  கனடா போய் இடையில் ஒரு கிழமை நியூயோர்க் போய்(ட்ரம்ப் அங்கிளை மீட் பண்ணத்தான்:)).. திரும்ப கனடா போய் ஊர் திரும்பினோம்...

Sunday, 11 June 2017

"அந்தப்... பத்து மணி நேரங்களில்....:("

நான் எழுதப்போவது “என்பக்கத்துக்குச்” சொந்தமானது அல்ல:), இது “நம்ம ஏரியாவுக்கானது” [<-----இதில் கையை வச்சு, போய்ப் படிச்சிட்டு வாங்கோ]. ......ஆரம்பம் “ரோஜா” கேட்டார் கெள அண்ணன்:), கொடுத்த ரோசா வாட முன்பே.. விவாகரத்துக்குக் கதை எழுதச் சொல்லிட்டார்ர் கர்ர்ர்ர்ர்ர்:).. ஹா ஹா ஹா:). எனக்கு எதையும் உடனுக்குடன் செய்து பார்க்கத்தான் ஆசை, அதனால இது எழுதியவுடன் சுடச்சுட வெளியிடலாம் என்பதால், தலைப்புத் தராமல் முடிவைச் சொன்னவுடன் எழுதிட்டேன்:) அதிராவோ கொக்கோ.. சரி சரி நான் பாருங்கோ ரொம்ப அமைதி.. அதிகம் அலட்டமாட்டன்:) அதனால ஸ்ரெயிட்டா ரெயினில ஏறுவோமா?:).

Monday, 5 June 2017

அதிரா வீட்டில் புய்ப்பம்:)

வாங்கோ வாங்கோ.. அதிரா வீட்டுப் பூங்காவைச் சுத்திப் பார்க்கலாம் வாங்கோ... எனக்கொண்ணும் தரவேண்டாம்.. ச்சும்மா பாருங்கோ:) ஆனா கையில மை வச்சு,  மொய் எழுதாமல் போனால்.. நுளம்பு வந்து காதில கடிக்கும் டொல்லிட்டேன்ன்ன்ன்:)

Wednesday, 31 May 2017

இயற்கை பொல்லாததோ? மனிதர் பொல்லாதவரோ?:)

பிள்ளையார் பிடிக்கப் போய்க் குரங்காக மாறும் கதை பல நேரங்களில் நடந்துவிடுகிறது. நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைத்து விடுகிறது. மனிதர்களுக்கு நன்மை செய்கிறோம் பேர்வழி என வெளிக்கிட்டு.. ஒரு வாயில்லா அப்பாவி ஜீவனுக்கு பணிஸ்மண்ட் கொடுத்தாகி விட்டது...

அதாரது கல்லெடுக்கிறதூஊஊஊ?:) நோ நோ.., நோ சண்டை:), சமாதானமாகிப் போயிடலாம்:)..

Thursday, 25 May 2017

அந்தாட்டிக்கா பார்ட் ரூஊஊஊஊ:)

என்னாதூஊஊஉ தலையைத் தண்ணிக்குள் வைக்கோணுமோ?:) அதை விட ஒரேயடியாத் தேம்ஸ்ல குதிச்சிடுவேனே :)
தன் முதலாம் பகுதியில், பனியில் சறுக்கி விளையாடி, வழுக்கி விழுந் தெழும்பிய நான், திரும்பவும் அதில் கால் வைக்க மாட்டேனெல்லோ.. எனக்கென்ன லூஸோ?:).. திரும்பவும் வழுக்கி விழ.. மீ ரொம்ப உசாராக்கும்:)... ஆனா இன்னொன்றில் தைரியமா கால் வைப்பனெல்லோ?:).. அதாவது ஒரு சொல்லில் எழுத்துப்பிழை பிடிச்சால்... அதை திருத்திக் கொள்வேன் ஆனா இன்னொன்றில் விட்டிடுவேன் எல்லோ:).. அப்பூடித்தான்:).. சரி குதிக்கலாம் வாங்கோ:).  இதன் பகுதி ஒன்றுக்கான லிங்

Monday, 15 May 2017

அந்தாட்டிக்காவில மனிசன் வாழ முடியாதாம்..!
பெண்டாட்டியோடு புருஷன் வாழ முடியாதாம்:)

டி வாங்கோ ஓடி வாங்கோ, தலைப்பைப் பார்த்ததும் அதிரா வீட்டில என்னமோ புறுணம் பார்க்கலாம் என நீங்க ஓடி வருவது தெரியுது:), அதுதான் இல்ல:).. இது ஒரு பட்டிமன்றத்தில் சொன்னார்கள், அதைப் பொறுக்கி வந்திட்டேன்.. என் போஸ்ட் படிச்சிட்டு முடிவில சொல்லுங்கோ தலைப்பு உண்மையா பொய்யா என்பதை:)..

Monday, 8 May 2017

ஊர் ஓரமா.. ஆத்துப் பக்கம் அதிரா வீடு:)

என்ன இது எல்லோருமே கறுப்புக் கறுப்பாத் தெரிகினமே?:) என்னாச்சு?.. ஓவரா சன் பாத் எடுத்திருப்பினமோ...

Thursday, 4 May 2017

நிலா.., ஹனிமூன் போயிருக்காம்:)

ப்பப்ப எனக்கு இப்பூடி விபரீத ஆசைகள்:) உதிப்பதுண்டு, மனதில் தோன்றியவுடன் கல்லெறி விழுந்தாலும் பறவாயில்லை என டக்குப் பக்கென எழுதிடுவேன் என் நோட் புக்கில்:).. சமீபத்தில் காதில் கேட்ட இரு வரிகளை வச்சு இரண்டு கவிதைகளாக்கிட்டேன்.. ஓடிவாங்கோ வந்து படிச்சு.. மகாகவி, கவிஞர் அதிராவை வாழ்த்துங்கோ:)..

Sunday, 30 April 2017

டமில் மனமும்:) வோட்டும்:)

ல்ல வேளை சகோ டிடி நாட்டில் இல்லைப்போல இருக்கு:), அதனால பயமில்லாமல் தலைப்புப் போட்டு விட்டேன்:) இல்லையேல் செத்துப் போகும் ஒரு திரட்டிக்கு இப்பூடி எல்லாம் தலைப்புத் தேவையா எனத் திட்டியிருப்பார்:)..ஹா ஹா ஹா.

Wednesday, 26 April 2017

ஒரு பென்சிலுக்குள் அடக்கி விட்டார்களே!....

அதிராவை:)
ஃபிரான்ஸ் போயிருந்த நேரம், பரிஸ் ஐபிள் டவர் பார்த்து விட்டு அதன் சுற்றுச் சூழலை ரசித்தபடி நடந்து கொண்டிருந்தோம்... அருகிலே சென்நதி வளைந்து நெளிந்து ஓடுகிறது.. அதன் கரையிலே அங்காங்கு இரு ஸ்டூல்களோடும் ஒரு bag  உடனும் சிலர் இருந்தார்கள். அவர்கள் நம்மைப் பார்த்து வரைந்து கொடுப்பவர்கள்.

Sunday, 23 April 2017

கோபு அண்ணனும்.. கரண்ட் நூலும்:)

ப்போ சந்திரமண்டலம் போய் முடிஞ்சு செய்வாய்க்கிரகத்துக்கு ஆட்கள் போகத் தொடங்கியிருப்பதாக அரசல் புரசலாக அறிந்தேன்.. அப்பூடித்தான் புளொக் எழுதுவதிலிருந்து கொஞ்சம் மூவ் ஆகி... மின்னூல் வெளியீட்டில் நம்மவர்கள் சிலர் எழுத ஆரம்பித்திருப்பது.. ஆச்சரியமான, மகிழ்ச்சியான செய்தி.

Friday, 21 April 2017

எவ்ளோ நாளைக்குத்தான் ரொம்ப நல்லவரா/வல்லவரா நடிக்கிறது சொல்லுங்கோ?:)

நானும் எவ்ளோ காலத்துக்குத்தான் ரொம்ப நல்ல பிள்ளையா +  வல்ல பிள்ளையா நடிச்சுக்கொண்டிருப்பதாம்? இருப்பினும் அதிராவோ கொக்கோ?:) உள்ளே நடுங்கினாலும் வெளியே காட்டிடாமலேயே காலத்தை.. இன்னும்.. ஓட்டிக்கொண்டிருக்கிறேன்:).

Monday, 17 April 2017

ழகலாம் வாங்கோ...  புதிசு புதிசாய் தெரிஞ்சு கொள்வதற்கு வயதும் இல்லை கால நேரமும் இல்லை, அதனால பயப்பூடாமல் வலது காலை எடுத்து வச்சு வாங்கோ:)..
== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==== ^._.^ ==

Friday, 14 April 2017

K சரியும்.. அம்மாவும் மீயும்:)

நாமிருவர் நமக்கிருவர் போதும் என நிம்மதியாக இருந்த குடும்பத்தில:), 5 வருட இடைவெளியின் பின்னர்.. அதிரடியாக வந்து பிறந்த கொயந்தை நான்:). அதனால வீட்டில் அனைவரும் பயங்கர செல்லம் தருவார்கள் . நான் மட்டும் அப்பாவிடம், ஒரு அடிகூட வாங்கியதில்லை. எப்பவும் அம்மாவோடயே ஒட்டி இருப்பேன்.. ஒரு குட்டி இடத்தில் அம்மா இருந்தால்கூட, ஓடிப்போய் ஒட்டி உரசி கஸ்டப்பட்டு அதில் நானும் இருப்பேன்... இப்போ இந்தப் பழக்கம் எங்கள் டெய்சிப்பிள்ளையிலும், சின்னவரிலும் இருக்குது.

Saturday, 8 April 2017

நான் ஒரு அரை லூஸு:), எச்சரிக்கை!!!

து நடந்து இப்போ ஒரு மாதமாகுது, சொல்ல நினைச்சு காலம்தான் ஓடிவிட்டது.. இந்தச் சம்பவத்தைச் சொல்ல முன்னர், கொஞ்சம் என்னைப் பற்றிச் சொல்லிடுறேன். நான் ஒரு அரை லூஸு:).. அதாவது முழு லூஸு அல்ல(நோட் திஸ் பொயிண்ட்:)).

Wednesday, 5 April 2017


வாழைத் தண்டு போல உடம்பு+ மாங்காய்ப் பச்சடி..:)

அதிரா சமையல் என்றதும் எதுக்கு இப்பூடிப் பிதுங்குது விழிகள் எல்லாம் கர்ர்ர்ர்ர்:)
லைப்பைப் பார்த்ததும் பழைய பாட்டெல்லாம் நினைவுக்கு வருமே... எப்பவும் என் போஸ்ட்டுக்கும் தலைப்புக்கும், அத்தோடு எனக்கும் சம்பந்தம் இருப்பது மிக மிகக் குறைவே:). சரி சமைப்பதற்கு முன் அதிராவின் கிச்சினைப் இங்கே பார்த்திட்டு வாங்கோ... ஹொட்டேலுக்குப் போய் சாப்பிடமுன் கிச்சினை செக் பண்ணுவது நல்லதாமே:)..

Sunday, 2 April 2017

னிர்தாங்முக்கிம்:)

மனிசர் தாங்க முக்கியம், அதுக்குப் பின்னர்தான் அனைத்தும். சில நேரங்களில் மனிதர்களுக்கு கொடுக்கும் முக்கியத்தை விட ஏனையவற்றுக்கு முக்கியம் கொடுத்து விடுகிறோம்.

Thursday, 30 March 2017

நான் ஒரு முட்டாளுங்க:)

சின்ன வயதிலிருந்தே, இந்த ஏப்ரல் fool என்பது எங்களிடத்தில்/ நம்மவர்களில் ஒரு கொண்டாட்டமான நிகழ்ச்சிதான், எப்படிக் கவனமாக இருந்தாலும் ஃபோன் க்குள்ளாலே என்றாலும் ஏமாத்திப் போடுவார்கள், நாமும் ஏமாத்தியிருக்கிறோம். இப்போகூட இம்முறை யாரும் ஏமாத்த விட்டிடக்கூடாதென்றே நினைச்சுக்கொண்டிருக்கிறோம், எங்கள் அக்கா இதை நன்றாக செய்வா கர்:).

Sunday, 26 March 2017

நானும் விவசாயிதான்:)

நானும் படு பயங்கர உழைப்பாளிதான்:).. இங்கே என் வலது பக்கத்தில் இருக்கும் லேபல்களில்...  “என்னுள்ளே புதைந்து கிடப்பவை”, எனும் லேபலை கொஞ்சம் ஓபின் பண்ணிப் பாருங்கோ தெரியும் என் கை வேலைப்பாடெல்லாம்:)..

Friday, 24 March 2017

பெண்களைப்பற்றி, எங்களைப்பற்றி என்ன தெரியும் ..
_(-^_^-)_

 நீண்ட நாட்களாக நினைப்பதுண்டு, நம்மைப்பற்றி நாங்களே கொஞ்சம் புகழோணும் என... “தன்னைப் புகழாத தனையன் உண்டோ?”, என ஒரு பழமொழிகூட இருக்கே:).  மார்ச் மாதத்தில் வரும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில், பிரித்தானியாவில் மதேர்ஸ்டே கொண்டாடப்படுகிறது, இதனையொட்டி என் மனதில் உதித்த எம்மைப்பற்றிய சில விசயங்களைப் பகிரலாம் என நினைச்சேன். நான் பெண்களைப்பற்றி மட்டுமே இதில் பேசப்போகிறேன்:)..

Thursday, 16 March 2017

பாவற்காயும், றீட் மோர் உம்:)

வாங்கோ வாங்கோ... பாவற்காய் தெரியும் அதென்ன மோர்? றீட் மோர் எனப் புதிசா இருக்கே என நினைச்சு வந்திருக்கிறீங்க... தயங்காமல்  வாங்கோ.. நான் இம்முறை இரண்டு மெயின் டிப்பாட்மென்ட்களைப்:) பற்றிப் பேசப்போகிறேன்...
தில் முதலாவது கிச்சின் டிப்பார்ட்மெண்ட்:)... ஹையோ எதுக்கு இப்போ , கிச்சின் என்றதும்..மருந்தடிச்ச பூச்சிபோல எல்லோரும் பொத்துப் பொத்தென மயங்கி விழுறீங்க?:).. அப்பூடி நான் என்ன சொல்லிட்டேன்ன்:).. ஆராவது ஐஸ் வோட்டர் அடிச்சு எழுப்பிவிடுங்கோ எல்லோரையும்:).. இல்லையெனில் என் கைக்கு சங்கிலி வந்திடப்போகுதே வைரவா...:).

Sunday, 12 March 2017

நானும் என் செல்ல மகளும்..

ங்கள் டெய்சி பற்றிச் சொல்வதானால், ஒரு புத்தகமே எழுதலாம், ஊரில் பல வளர்த்தோம் ஆனா வெளிநாடு வந்து பலகாலத்தின் பின்பு, முதன் முதலில் பூனை வளர்க்கவே ஆசையாக இருந்துது, பெட் ஷொப் போனோம் அங்கு பூஸ் இருக்கவில்லை, அழகழகான முயல்குட்டிகள் புசுபுசுவென இருந்திச்சா... பார்த்தவுடன் எனக்கு ஆசை அதிகமாகி:) இந்த முயல் இப்பவே எனக்கு வேணும் எனக் கேட்டு உடனேயே வாங்கி வந்தோம், மொப்பி எனப் பெயரிட்டு வளர்த்தோம்... இந்த   ஆல்பத்தில் பாருங்கோ எங்கள் மொப்பிப் பிள்ளையை...

Thursday, 9 March 2017

இதுக்கு என்ன சொல்வது???...


யாரைக் குறை சொல்வது? அடுத்தவரைக் குறை சொல்வது என்பது சுலபம், ஆனா   “தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால் மட்டுமே புரியும்”.. என்பதுபோல யாரையும்குறை கூறுவதை நிறுத்திவிட்டு,

Sunday, 5 March 2017

Walk போக வாங்கோ....

சே ..சே... கையை எல்லாம் பிடிக்கக்கூடாது விடுங்கோ... ஆஆஆ பொக்கட்டுக்குள்ளும் கை வச்சு நடக்கக்கூடாது... கையை வெளில எடுங்கோ, குளிர்ந்தால் கிளவுஸ் போடுங்கோ..

Wednesday, 1 March 2017

ந்தித்வேளை!!!

லைப்பே நன்றாக இருக்கிறதெல்லோ?.. உண்மையில் சில சமயம், உள்ளே இருக்கும் பொருட்கள் நல்லா இல்லாவிட்டாலும், வெளிப் பக்கட்டில் இருக்கும் டிசைனும் எழுத்தின் அழகும்.. ஒரு தடவை வாங்கித்தான் பார்ப்போமே என மனதை தூண்டும்....

Friday, 24 February 2017

நானும் என் அழகிய பற்களும்:)

ன் பல்லைப் பற்றிய  “அவர்கள் ட்ருத்”  இன், கொமெண்ட் படிச்சதும், ஓடினேன்ன்.. ஓடினேன்ன்ன்.. தேம்ஸ் இன் ஆரம்பம் வரை ஓடினேன்... ஆனா அங்கு சடின் பிரேக் போட்டு நின்று விட்டேன்ன்...:)

Sunday, 19 February 2017

நான் ரைந்விமே...

நான் வரைந்த ஓவியமே..
நல்ல இங்கிலீசுக் காவியமே:)..
நான் சாப்பிடும்போது
நீ பட்டினி எனில்
நீ பட்டினி இருக்கும்போதும்
நான் சாப்பிடுவேன்ன்:))

எழுத்தோட்டம்:-
இந்தப் புத்தம் புதிய புத்தாண்டில் நான் எடுத்த சத்தியம்... அவித்த முட்டை சாப்பிடுவதில்லை என்பதே:).. எனக்கு எந்த விதமான முட்டை ஐட்டமும் பிடிக்காது, சாப்பிடுவேன் ஆனா பெரிதாக ஆசை எல்லாம் இல்லை, ஆனா இந்த அவித்த முட்டை மட்டும்.. சாமத்தில் எழுப்பி தந்தாலும், யாராவது வேண்டாமெனக் கொட்டப் போனால்கூட பறிச்சு சாப்பிடுவேன் அவ்ளோ ஆசை:)..

Tuesday, 14 February 2017

மூட் அவுட் ஆ??? அப்போ கொஞ்சம் இக்கரைச் சூடு:)

ஹா ஹா ஹா அதென்ன அது மூட் அவுட் என்றால்??.. இப்போ பலபேர் அடிக்கடி சொல்றார்கள், ஒரு சின்னப் பிரச்சனை மூடவுட் ஆகிட்டேன் அதனால வெளியே வரவில்லை, கொமெண்ட்ஸ் ஏதும் போடவில்லை:), பேசாமல் இருந்திட்டேன்..

Friday, 10 February 2017

கிரில் உம் பரிசும்:)மீயும்:)


ன்னுடைய புரொப்ளம் என்னன்னா... நினைக்கும்போது நிறைய எழுத வருது, ஆனா எழுதும்போது நினைவுக்கு நிறைய வருகுதில்ல:)).. [ஆனா மீ சுவீட் 16 என்பதனை இங்கே நினைவுகூர விரும்புறேன்[ஸ்ஸ்ஸ் இதை இங்கின கரெக்ட்டாச் சொல்லாட்டில்... 61 தான் என ஸ்ராம்ப் ஒட்டிடுவாங்க கர்ர்ர்ர்ர்ர்:))].

ங்கு நாம் நண்பர்கள் குடும்பங்கள் மாத்தி மாத்தி ஒவ்வொரு வீட்டுக்கும் கூப்பிட்டு ஹெட்டுகெதர் போல லஞ் அல்லது டின்னர் கொடுப்பதுண்டு.  அப்போ போகும்போது பிஸ்கட், சொக்கலேட் , கேக், இப்படிக் கொண்டு போவது பிடிக்காதெனக்கு.. அதனால தேடித் தேடி ஏதும் பிரயோசனமான பொருட்களாக கொடுக்க விரும்புவேன். குழந்தைகளுக்கு அவர்களுக்குப் பிடித்ததை வாங்கிவிட்டு,

பெரியாட்களுக்காக, நல்ல அழகான நொன் ஸ்ரிக் சமையல் பாத்திரங்கள், அழகழகான டிசைன்களில் மின்னும் மின் விளக்குகள்(Table lamps), Flower vase, Perfume, விதம் விதமான வாசனை மெழுகுவர்த்திகள் இப்படியானவற்றை தேடி வாங்கிக் கொடுத்திருக்கிறேன்,

ந்த வகையில் இம்முறை கிரிஸ்மஸ் க்கு என்ன கொடுக்கலாம் என தேடிய இடத்தில், நல்ல ஒரு பொருளாக இந்த கிரில் தெரிஞ்சுது, 4 குடும்பங்களுக்கு இதை பிரசண்ட் பண்ணினோம்.. கிரிஸ்மஸ் க்காக.

னைவரும் சந்தோசப்பட்டார்கள், மிகவும் பிரயோசனமாக இருக்கிறது என்கிறார்கள், கேட்க எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்குது. இதில் நாங்கள் சாம்பிளுக்காக முதலில் குட்டிக் கிரில் வாங்கினோம், எங்களுக்கு பிரயோசனமாக இருந்ததனால், இதில் பெரிய சைஸ் வாங்கி பிரசண்ட் பண்ணினோம், நாமும் பெரிதாகவே வாங்கியிருக்கலாம் என எண்ணுகிறோம் இப்போ..., ஆனா பிள்ளைகளுக்கு அவசரமா ஒரு சான்விச் செய்து கொடுக்க, குட்டிக் கிரில்தான் வசதி.

இதில் செய்த சீஸ் சான்விச், ஹாம் சான்விச்.. அவரவர் விருப்பத்துக்கேற்ப நன்கு முறுகவிட்டும் எடுக்கலாம்.

நீங்களும் வாங்குங்கோ அல்லது அட்ரஸ் தாங்கோ அடுத்த கிரிஸ்மஸ் க்கு பிரசண்ட் பண்ணுறேன்:).

இது என்ன தெரியுமோ?:) இதையும் இதில்தான் கிரில் பண்ணி எடுத்தேன்:)..வாழைத்தண்டு:)

நாம் கிரில் பண்ணும் பொருட்களில் கொழுப்பு இருப்பின், கீழே இருக்கும் தட்டில் முழுவதும் வடிந்துவிடும், அதனால்தான் இதை அனைவரும் விரும்புகின்றனர்.

Breaded chicken, Asparagus. இதில் அஸ்பரகஸ் ஐ எதுவும் பண்ணத் தேவையில்லை, சும்மா கழுவிப்போட்டு அப்படியே கிரில் பண்ணிட்டால் சரி பின்பு சோல்ட் அண்ட் பெப்பர் போட்டு அப்படியே சாப்பிடலாம்.

ங்கு எல்லோரிடமும் சமைக்கும் குக்கரோடும் கிரில் இருக்கு ஆனா அது பெரிசு, நிறைய செய்யும்போது அதைப் பாவிக்கலாம், இது பிரெட் சான்விச் செய்ய இன்னும் சூப்பராக இருக்கு...

முன்பு இந்த சான்விச் ரோஸ்டர்தான் டிமாண்ட்டாக இருந்துது வீட்டில், இப்போ கிரில் க்குத்தான் முதலிடம், ரோஸ்ட்டர் உள்ளே ஒளிச்சிட்டார்ர்:).


சில சமையல் ரிப்ஸ்:)...
கவனமாக் கேட்டு:) கிட்னியில் சேஃப் பண்ணிடுங்கோ.. எப்பவாவது பிரயோசனமாகும்:)..

ரெடிமேட் பூக்களாக வாங்கி வைப்பதை விட, தேங்காய் வாங்கி வந்து இப்படி உடைச்சு உடனேயே திருவி, பிரீஸர் பாக்குகளில் போட்டு பிரீஸ் பண்ணிடுங்கோ.. தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம்.நம் வீட்டு பிரிஜ் இல், அப்பப்ப கறி வாசனைகள் அல்லது மரக்கறி வேறு ஏதாவது வாசமோ வராமல் இருக்க, பிரிஜ்ஜில் ஒவ்வொரு தட்டிலும் அங்கங்கு பிளிந்து விட்ட தேசிக்காய் கோதுகளை ச்ச்சும்மா ச்சும்மா வச்சு விடுங்கோ.. எந்த விதமான மணமும் இருக்காது, சுத்தமான நல்ல மணம் மட்டுமே இருக்கும். ஸ்ஸ்ஸ்ஸ் அதிரா பிரிஜ்ல என்ன என்ன வச்சிருக்கிறா எனப் பார்க்காமல்:) தேசிக்காய் கோதுகள் எங்கெங்க இருக்கு எனப் பாருங்கோ:) கர்ர்:))


ஊசிக்குறிப்பு:-
இம்முறை ஊசிக்குறிப்பேதும் இல்லை:)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அதிரா எழுதும் டயரியிலிருந்து:)..

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++